இந்தியாவில் மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு..

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஓய்ந்து வந்த நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக தினசரி பாதிப்பு ஏறுமுகமாக உள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 41,195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு 38,353 ஆக இருந்த நிலையில், தற்போது புதிய பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 490 பேர் உயிரிழந்துள்ளனர்.. இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,29,669 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,12,60,050 ஆக உள்ளது.இதில் குணமடையும் விகிதம் 97.45 சதவீதமாக உள்ளது

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,87,987 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 52,36,71,019 உயர்ந்துள்ளது.நேற்று ஒரே நாளில் 44,19,627 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைப்பு: தமிழக அரசு அறிவிப்பு

Thu Aug 12 , 2021
தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோருக்கான கட்டணத்தை தமிழக அரசு மாற்றி அமைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல், தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதன் அடிப்படையில் தீவிரம் இல்லாத கொரோனா சிகிச்சைக்கு நாளொன்றுக்கு ரூ. 5000 என்று நிர்ணயம் செய்துள்ளது. ஆக்சிஜனுடன் கூடிய சிகிச்சைக்கு தினமும் ரூ. 15,000 என இருந்த நிலையில் தொகுப்பாக […]
corona-treament-amount-changed-in-private-hospitals
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய