புயல் எச்சரிக்கை கூண்டு என்பது என்ன ? அவை ஏற்றப்படுவதற்கான காரணங்கள் ??

கனமழை மற்றும் புயல் காலங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படுகின்றன .புயல் எச்சரிக்கை கூண்டுகள் 1 முதல் 11 கூண்டுகள் ஏற்றப்படுகின்றன .புயல் எச்சரிக்கை கூண்டுகள் இரவு நேரங்களில் வண்ண ஒளி விளக்குகளாலும்,பகல் நேரங்களில் மூங்கில் தடைகளால் ஆன குண்டுகளும் ஏற்றப்படுகின்றன .

ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு :

ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாககக்கூடிய வானிலை சூழலும் ,துறைமுகங்கள் பாதிக்கப்படமால் ,பலமான காற்று வீசும் என்பதை குறிக்கிறது .

இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு:

இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால்,புயல் உருவாகி உள்ளது என்பதை எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது .

மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு:

மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் ,கன மழையும் மற்றும் திடீர் காற்றும் ஏற்படும் .வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்பதை குறிக்கிறது .

நான்காம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு:

நான்காம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் ,துறைமுகத்தில் உள்ள கப்பல்களுக்கு ஆபத்து என்பதை குறிக்கிறது .

ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு:

ஐந்தாம் எண் எச்சரிக்கை ,புயல் உருவாகி உள்ளதை குறிக்கிறது .புயல் ஆனது துறைமுகத்திற்கு இடது பக்கமாக கடக்கும் என்பதை குறிக்கிறது .

ஆறாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு:

ஆறாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் ,துறைமுகத்திற்கு வலது பக்கமாக புயல் கடக்கும் மற்றும் துறைமுகமானது கடுமையான வானிலைக்கு உட்படுத்தப்படும் என்பதை குறிக்கும் .

ஏழாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு :

ஏழாம் எண் எச்சரிக்கை ,புயல் ஆனது துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ கரையை கடக்கும் என்பதை எச்சரிக்கிறது .

எட்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு :

எட்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் ,மிகுந்த அபாயத்திற்கான எச்சரிக்கையாகும் .புயலானது தீவரமாகவோ ,அதி தீவிரமாகவோ மாறி ,துறைமுகத்திற்கு இடதுபக்கமாக கரையை கடக்கும் என்று குறிக்கப்படுகிறது .

ஒன்பதாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு :

ஒன்பதாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் புயலானது தீவிரமடைந்து அல்லது அதி தீவிரமாக உருவெடுத்துள்ளது என்பதை குறிக்கும் .

பத்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு:

பத்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் ,புயலானது தீவிரமடைந்து ,துறைமுகத்திற்கு அருகில் கரையை கடந்து செல்லும்போது ,மிகுந்த அபாயத்தை ஏற்படுத்தும் என்பது அர்த்தமாகும் .

பதின்னொன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு:

பதின்னொன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் அது உச்சபட்சமானது ஆகும் .இது வானிலைமையத்துடனான தொடரபை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது என்பது பொருள்.

Next Post

SBI வங்கியில் 8500 அப்ரெண்டிஸ் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது : ஆன்லைன்ல் விண்ணப்பிக்க கடைசி தேதி : 10 -12 -2020 !!

Tue Nov 24 , 2020
பாரத் ஸ்டேட் வங்கியில் Apprentice பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது .மொத்தம் 8500 அப்ரெண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .அந்ததந்த மாநிலங்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன .பட்டதாரி இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . State Bank of India : பணி : Apprenticeமொத்த காலியிடங்கள் : 8500தமிழ்நாடு காலிப்பணியிடங்கள் : 470 உதவித்தொகை : முதலாம் ஆண்டு ரூ.15000 ,இரண்டாம் ஆண்டு ரூ .16 ,500 ,மூன்றாம் ஆண்டு ரூ […]
SBI-apprentice-recruitment-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய