2021 – 22ஆம் கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டம் குறைப்பு : தமிழக அரசு அறிவிப்பு..

கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தை கருத்தில் கொண்டு நடப்பு கல்வி ஆண்டில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் குறைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது

தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக நடப்பு கல்வியாண்டிலும் பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை. பள்ளிகள் திறப்பதில் உள்ள நிச்சயமற்ற தன்மையையும், நேரடி வகுப்பறையில் உள்ள இடைவெளியையும் கருத்தில் கொண்டு, முழு கல்வியாண்டுக்கு வடிவமைக்கப்பட்ட அனைத்து பாடப்பகுதிகளையும் மாணவர்களுக்கு நடத்தி முடிக்க முடியாது.

இந்நிலையில் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலிடம் கடந்த ஆண்டை போல எந்தெந்த பாடங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து முடிவை தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. இதன்படி நிபுணர் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், 1 முதல் 12-ம் வகுப்பு வரையில் வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டிய பாடங்கள் குறித்த அறிவிப்பை தெரிவித்துள்ளது.

நிபுணர் குழு அளித்த பரிந்துரையின் படி ,1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 50 முதல் 54 சதவீதம் வரையிலும், 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 60 முதல் 65 சதவீதம் வரையிலும் பாடங்களுக்கு முன்னுரிமை அளிக்க பரிந்துரைத்தது.

இதன்படி,

  • 1 முதல் இரண்டாம் வகுப்புக்கு – 50% பாடங்கள் குறைப்பு.
  • 3 முதல் 4 ஆம் வகுப்பு வரை – 49% பாடங்கள் குறைப்பு.
  • 5 ஆம் வகுப்புக்கு – 48% பாடங்கள் குறைப்பு.
  • 6 ஆம் வகுப்புக்கு – 47 % வரையிலான பாடங்கள் குறைப்பு
  • 7,8-ம் வகுப்பு வரை 40% – 50% பாடங்கள் குறைப்பு.
  • 9-ம் வகுப்புக்கு 38% பாடங்கள் குறைப்பு.
  • 10-ம் வகுப்புக்கு 39% பாடங்கள் குறைப்பு.
  • 11, 12-ம் வகுப்புகளுக்கு 35% – 40% பாடங்கள் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா நிலவரம்..

Sat Aug 14 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,916 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி 20,427 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,496 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 34 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 223 பேருக்கும், […]
district-wise-corona-updates-14-8-21
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய