
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஜூன் 7 முதல் 14ம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு வருகிற 7-ந்தேதி அதிகாலை வரை அமல்படுத்தப்பட்டிருந்தது.மேலும்
ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 14ஆம் தேதி வரை மேலும் ஒரு வாரம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் நாமக்கல், திருவாரூர், தஞ்சை, கரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கொரோன தொற்று அதிகம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது .
தமிழகத்தின் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கின் போது செயல்பட அனுமதிக்கப்பட்டவை..
*மளிகை, காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
*பழங்கள், பூக்கடைகளும் செயல்பட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
*இறைச்சிக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
*மீன்சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டுமே அனுமதிக்கப்படும்.
*அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
*சார் பதிவாளர் அலுவலகங்களில் நாளொன்றுக்கு 50 டோக்கன் மட்டுமே வழங்கப்பட்டு பத்திரப்பதிவு நடைபெறும்.
*தீப்பெட்டி தொழிற்சாலைகளில் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
*வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு (House Keeping) உள்ளிட்ட சேவைகள் இ-பதிவுடன் செயல்பட அனுமதி.
*எலக்ட்ரீசியன், பிளம்பர்கள், தச்சர், கணினி பழுதுநீக்குவோர் உள்ளிட்ட சுய தொழில் புரிவோருக்கு காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
*மிதிவண்டி, மோட்டார் சைக்கிள் பழுது நீக்கும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
*மின் பொருட்கள் (எலக்ட்ரிக்கல்) பொருட்கள் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
*வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.
*கல்வி புத்தகங்கள், எழுதுபொருட்கள் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.
*வாகன பழுதுபார்க்கும் மையங்கள் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.
*வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்கள் இ-பதிவுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
*வாடகை டாக்சிகளில் ஓட்டுநர் தவிர 3 பேர் பயணிக்க மட்டுமே அனுமதி.
*ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
*நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகளை விற்பனை செய்யப்படும் திட்டம் வழக்கம் போல் செயல்படும்.
*டாஸ்மாக் ,சலூன் மற்றும் தேநீர் கடைகள் செயல்பட அனுமதி இல்லை.
*பேருந்து சேவைகளுக்கு அனுமதி இல்லை.