
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளின்றி பொதுமுடக்கத்தை ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கானது 31-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், கொரோனா நோய்த்தொற்று மாநிலத்தின் சில பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் ஊரடங்கு மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டசெயல்பாடுகள் தவிர கூடுதலாக எந்தவித தளர்வுகளுமின்றி 31-7- 2021 முதல் 9-8-2021 காலை 6.00 மணி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு குறித்து தமிழக அரசு வெளியிட அறிக்கையில்,
- வணிக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு கட்டாயமாக உடல் வெப்ப நிலை பரிசோதனையை செய்ய வேண்டும்.
- அதிக அளவில் மக்கள் கூட்டம் கூடும் பகுதி அடையாளம் காணப்பட்டால் அந்த பகுதியை மூட மாவட்ட ஆட்சியர் முடிவு செய்யலாம்.
- அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
- விதிமுறைகளை முறையாக கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த ஆட்சியர்கள், காவல்துறைக்கு முதல்வர் அறிவுறுத்தல்
- நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட வேண்டும்
- கொரோனா கண்டறிதல்,சிகிச்சை, தடுப்பூசி ஆகிய பணிகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
- வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில் வழங்கப்பட்ட தளர்வுகளை தவறாக பயன்படுத்தினால் பெரும் பாதிப்பு உருவாகும்.
- 3-வது அலையை தடுக்க பொதுமக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.முகக்கவசம் ,சமூக இடைவெளி ஆகியவற்றை முறையாக கடைபிடித்தால் அவசியமாகும்.மேலும் அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுதல் அவசியமாகும்.