
இந்தியாவில் கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கானது அமல் படுத்தப்பட்டு வருகிறது.கொரானாவின் பரவல் தமிழகத்திலும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று பல்வேறு புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் வெளியே செல்லும்போதும்,பொது இடங்களிலும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
1.கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
2.வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வருவதற்கு இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
3.ஷாப்பிங் மால்கள்,பெரிய கடைகள்,மளிகை கடைகளில் 50 சதவிகித வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
4.பேருந்துகளில் பயணிகள் நின்றவாறு பயணிக்க அனுமதி இல்லை.மாவட்ட பேருந்துகள்,சென்னை மாநகர பேருந்துகளில் பயணிகள் நின்று கொண்டு பயணிக்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5.உணவகங்கள்,தேநீர் கடைகளில் 50% இருக்கைகளில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதி.
6.அனைத்து திரையரங்குகளிலும் 50% இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த அனுமதி.
7.தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தளங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதி.
8.அனைத்து மாநகராட்சி மண்டலங்களிலும்,மாவட்டம் தோறும் கொரோனா கண்காணிப்பு குழு அமைக்கப்படும்.
9.ஏப்ரல் 10 முதல் கோயம்பேட்டில் உள்ள சில்லறை வணிகத்திற்கு தடை .மேலும்,மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சிலரை விபரங்களுக்கு தடை விதிப்பு.
10.விளையாட்டு போட்டிகளை ரசிகர்கள் இன்றி நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
11.டாக்ஸியில் 3 பேர்,ஆட்டோவில் 2 பேருக்கு அனுமதி .
12.பொருட்காட்சி அரங்கம் வர்த்தகர்களுக்கு இடையேயான கேளிக்கை விடுதிகளில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
13.திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளில் 100 பேர் மட்டுமே பங்குபெற அனுமதி,மேலும் துக்க நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி.
14.சமுதாயம் ,அரசியல் ,கல்வி,பொழுதுபோக்கு,விளையாட்டு,கலாச்சார நிகழ்வுகள் ஆகியவற்றிற்கு உள் அரங்கங்களில் 200 நபர்கள் மட்டும் பங்கேற்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.