உலகிலேயே குழந்தைகளுக்கு முதல் முறையாக கொரோனா தடுப்பூசி செலுத்திய கியூபா..

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.தற்போது பெரும்பாலான நாடுகளில் 12- வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உலகிலேயே முதல் முறையாக 2-வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி கியூபாவில் தொடங்கப்பட்டுள்ளது. அப்டாலா மற்றும் சோபிரனா ஆகிய இரு தடுப்பூசிகளும் மருத்துவ பரிசோதனை முடிவடைந்தையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் 12-வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணியை கியூபா தொடங்கியது. இந்த சூழலில், திங்கள்கிழமை முதல் 2-வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடும் பணியை கியூபா தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கியூபாவில் போடப்பட்டு வரும் தடுப்பூசிக்கு இன்னும் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் கியூபாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

தொல்லியல் துறையில் முதுநிலைப் பட்டயப் படிப்புக்கு மாணவர் சேர்க்கை..

Tue Sep 7 , 2021
தொல்லியல் துறையில் 2021 – 2023 ஆண்டுக்கான முதுநிலைப் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தொல்லியல் துறை முதுநிலைப் பட்டயப் படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான மொத்த காலிப்பணியிடங்கள் 20 ஆகும். ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ரூ.5000 பயிலுதவித் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தொடங்க உள்ள இரண்டாண்டு கால முழுநேர தொல்லியல் முதுநிலைப் பட்டயப் படிப்பிற்கு (post […]
Archeology-admission-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய