
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் இன்று சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது .
சிபிஎஸ்இ பாடத்திட்டம் பின்பற்றப்படும் அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியாற்ற ‘சி-டெட்’ எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .இதற்கான தேர்வு ஆண்டுதோறும் பிப்ரவரி, ஜூலை மாதங்களில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற வேண்டிய ‘சி-டெட்’ தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை ,பின்னர் இந்தாண்டு ஜனவரி 31-ம் தேதி நாடு முழுவதும் 135 முக்கிய நகரங்களில் நடைபெற்றது. இத்தேர்வை சிபிஎஸ்இ தேர்வு அமைப்பானது நடத்தியது .
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வானது மொத்தம் 2 தாள்களைக் கொண்டது.தற்போது நடைபெற்ற தேர்வில் முதல் தாளை 12,47,217 பேர் எழுதி இருந்த நிலையில் 4,14,796 நபர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் ,இரண்டாம் தாளை 11,04,454 பேர் எழுதிய நிலையில் 2,39,501 நபர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது .
தேர்வு முடிவுகளை அறிய cbseresults.nic.in மற்றும் www.cbse.nic.in என்ற இணையதளங்களை அணுகவும்.