இந்தியாவில் புதிதாக 40,134 பேருக்கு கொரோனா தொற்று..

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு நேற்றைய பாதிப்பை விட சற்று குறைந்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா தினசரி பாதிப்பில் கேரளா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 40,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,16,95,958 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,24,773 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,08,57,467 ஆக உள்ளது.இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.36 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,13,718 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.கடந்த 24 மணிநேரத்தில் 17,06,598 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 47,22,23,639 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

CTET 2021 தேர்வு முறைகளில் மாற்றம் – CBSE அறிவிப்பு..

Mon Aug 2 , 2021
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (CTET) 2021 ஆம் ஆண்டிற்கான தேர்வு முறையில் மாற்றங்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு மத்திய ஆசிரியர் தகுதி தேர்வினை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) நடத்துகிறது.இந்த தேர்வில் தேர்ச்சி அடைபவர்களே பணியில் நீடிக்க முடியும் அல்லது பணி வாய்ப்பினை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு நடைபெற இருந்த CTET […]
CTET-Exam-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய