இந்தியாவில் சற்று அதிகரித்த இன்றைய கொரோனா பாதிப்பு..

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 10,197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,44,66,598 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 301 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,64,153 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,38,73,890 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 12,134 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,28,555 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் 67,82 ,042 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 113 கோடியே 68 லட்சத்தை கடந்துள்ளது.

Next Post

சட்ட பல்கலைக்கழக தேர்வு நேரடி முறையில் நடைபெறும் : துணைவேந்தர் அறிவிப்பு..

Wed Nov 17 , 2021
நேரடி முறையில் சட்ட பல்கலை. தேர்வு நடைபெறும் என்று அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்துள்ளார்.சட்ட படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் வரும் டிசம்பர் 20-ம் தேதி முதல் நேரடி முறையில் நடைபெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றின் கரணமாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தொடர்ச்சியாக மூன்று பருவத் தேர்வுகளையும் இணையவழி வாயிலாகவே நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வெளியிட்ட […]
direct-exam-in-law-college-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய