இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்..

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு நாள்தோறும் படிப்படியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. பல மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குகளும், கடுமையான கட்டுப்பாடுகளும் கொரோனா பரவல் தொற்றை முறியடித்து வருகிறது.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 70,421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 2,95,10,410 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 3,921 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு 1.27 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 95.43 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,81,62,947 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,74,305 ஆகும் .நேற்று ஒரே நாளில் கொரோனா பிடியிலிருந்து 1,19,501 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,73,158 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 25,48,49,301 டோஸ்கள் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Next Post

மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா நிலவரம்..

Mon Jun 14 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12,772 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 254 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29,801-ஆக அதிகரித்துள்ளது.அதிகபட்சமாக கோவையில் 1,728 பேருக்கும், ஈரோட்டில் 1,295 பேருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. […]
district-wise-positive-cases-in-tamilnadu-14-6-21
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய