
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 8,309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,45,96,776 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 267 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,69,247 ஆக அதிகரித்துள்ளது.இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,40,997, கேரளாவில் 40,132 பேர் அடங்குவர்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,40,28,506 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 10,207 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 99,023 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இது கடந்த 547 நாட்களில் குறைவான எண்ணிக்கை ஆகும்.
நாடு முழுவதும் இதுவரை பொதுமக்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 124 கோடியே 10 லட்சத்தை கடந்துள்ளது. இதில் நேற்று மட்டும் 80,98,716 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.