இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம் : புதிதாக 13,091 பேருக்கு கொரோனா தொற்று..

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 13,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,44,01,670 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 340 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,62,189 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,38,00,925 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 13,878 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,38,556 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.நாட்டில் நேற்று ஒருநாளில் மட்டும் 57,54,817 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை 1,10,23,34,225 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

Next Post

கொரோனா மாத்திரைகள் : விரைவில் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும் என தகவல்..

Thu Nov 11 , 2021
தீவிரமான மற்றும் லேசான கொரோனா அறிகுறிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மெர்க் நிறுவனம் தயாரித்த மோல்னுபிரவீர் மாத்திரைகள் வழங்க விரைவில் அவசர கால அனுமதி வழங்கப்படும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரமான கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களுக்கும் மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கும் இந்த மாத்திரை பரிந்துரைக்கப்படவுள்ளது. ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள பாக்ஸ்லோவிட் மாத்திரைகளுக்கு அனுமதி வழங்க சில காலம் ஆகலாம்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெருந்தொற்றிலிருந்து எண்டமிக் நோயாக கொரோனா மாறும் இச்சூழலில் இந்த இரண்டு […]
covid-19-Medicine-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய