இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் – இன்று புதிதாக 51,667 பேருக்கு கொரோனா தொற்று..

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நேற்றைய பாதிப்பை விட இன்று சற்று வெகுவாக குறைந்துள்ளது.கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்புகின்றன.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 51,667 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 3,01,34,445 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 1,329 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,91,28,267 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,93,310 ஆகும் .நேற்று ஒரே நாளில் கொரோனா பிடியிலிருந்து 64,527 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 6,12,868 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.நாடு முழுவதும் நேற்று வரை 30,79,48,744 பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Next Post

கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புக்கான சிகிச்சை - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..

Fri Jun 25 , 2021
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த நிலையில் ,தற்போது புதிய பாதிப்பாக கருப்பு பூஞ்சை நோய் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.தமிழகத்தில் இதுவரை 2,700 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.மேலும் இதுவரை 148 பேர் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழந்துள்ளனர். கரும்பூஞ்சை பாதிப்புக்கான அறிகுறிகள் தெரிந்தால் அலட்சியப்படுத்தக்கூடாது, மேலும் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு உடனே சிகிச்சை மேற்கொண்டால் முழுமையாக குணமடையலாம் […]
Black-Fungus-Symptoms
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய