
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 10,929 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,43,44,683 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 392 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,60,265 ஆக உள்ளது.இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,40,362 பேர் அடங்குவர்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,37,37,468 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 14,159 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,46,950 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.நாடு முழுவதும் நேற்று மக்களுக்கு 20,75,942 தடுப்பூசிகள் போடப்பட்டது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கை 107 கோடியே 92 லட்சத்தை கடந்தது.