இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,596 பேருக்கு கொரோனா தொற்று..

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 13,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 230 நாட்களில் இல்லாத அளவில் குறைவு ஆகும். இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,40,81,315 ஆக உயர்ந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக கேரளாவில் 7,555, மகாராஷ்டிராவில் 1,715, தமிழ்நாட்டில் 1,218 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 166 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,52,290 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,34,39,331 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 19,582 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,89,694 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் நேற்று 12,05,162 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 97 கோடியே 79 லட்சத்தை கடந்துள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

"இல்லம் தேடி கல்வி" என்ற புதிய திட்டம் தொடக்கம் : பள்ளிக்கல்வித்துறை..

Mon Oct 18 , 2021
“இல்லம் தேடி கல்வி” என்ற புதிய திட்டத்திற்கான விழிப்புணர்வு வாகனங்களை பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று துவங்கி வைத்துள்ளார். 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் குறைபாடுகளைப் போக்க, இல்லம் தேடிக் கல்வி என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,தற்போது இத்திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் குறைபாடைப் போக்க இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.இந்நிலையில், 1-8-ம் வகுப்பு வரை பயிலும் […]
illam-thedi-kalvi-thittam
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய