இந்தியாவில் புதிதாக 12,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ..

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 12,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,44,14,186 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 419 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,62,690 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,38,14,080 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 13,155 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,37,416 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.நாடு முழுவதும் நேற்று 53,81,889 டோஸ்களும், இதுவரை 110 கோடியே 79 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

Next Post

நிலவியலாளர் பதவிக்கான தேர்வு - TNPSC அறிவிப்பு ..

Fri Nov 12 , 2021
ஒருங்கிணைந்த நிலவியலாளர் சார்நிலை பணிகளுக்கான எழுத்து தேர்வு, 20, 21ம் தேதிகளில், சென்னை மாவட்ட தேர்வு மையத்தில் மட்டும் நடக்க உள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் ஹால் டிக்கெட், தேர்வாணையத்தின் இணையதளமான, www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களின் ஒருமுறை பதிவேற்றம் வழியே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்யலாம். தேர்வுக்கான நிபந்தனைகள் இணையதளத்திலும், ஹால் டிக்கெட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.
tnpsc-news-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய