COVID – 19 பாதிப்புகளை எவ்வாறு சமாளிப்பது ? UNICEF வழங்கும் நெறிமுறைகள் என்ன ?

கொரோனாவின் இரண்டாவது அலை நாட்டு மக்களையே அச்சுறுத்தி வருகிறது.தற்போது கொரோனா குறைந்து வரும் நேரத்தில் ,கருப்பு பூஞ்சை என்ற மற்றுமொரு தொற்று மேலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனவை வீட்டிலிருந்தே கையாள்வது எப்படி ?,மேலும் கொரோனவிலிருந்து விடுபடுவது எப்படி ? என்ற கேள்விகளுக்கு UNICEF அமைப்பு சில வழிகாட்டு முறைகளை கூறியுள்ளது.

*உங்களுக்கு உடல்நலக் குறைவு என்று நீங்கள் அறிந்தவுடன்,உடனடியாக மருத்துவமே செல்ல தேவையில்லை.நீங்களே உங்களை முழுமையாக சுய-தனிமைபடுத்திக் கொள்ளுங்கள்.
*ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை அல்லது அடிக்கடி உங்களின் மூச்சு வேகமாகும் போது உங்களது ஆக்சிஜென் அளவினை பரிசோதித்து கொள்ளுங்கள்.
*ஆக்சிமீட்டரின் ஆக்சிஜென் அளவு 94% க்கும் கீழே காண்பித்தால் உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாட வேண்டும்.
*ஒவ்வொரு 6 மணிநேரத்துக்கும் உங்களது உடல் வெப்பநிலையை கண்காணித்து கொள்ளுங்கள் . உங்களுக்கு தொடர் காய்ச்சல் இருந்தால் அடிக்கடி கண்காணியுங்கள்.
*3 நாட்களுக்கு உடல் வெப்பநிலை 101F (38C) தொடர்ந்தால் உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாட வேண்டும்.

கீழ்க்காணும் நிகழ்வுகளில் ஏதேனும் உங்களுக்கு நேர்ந்தால் உடனடியாக ஒரு அவசர மருத்துவ உதவியை நாட வேண்டும்.

*மோசமான சுவாசக் குறைபாடு ஏற்படும்போது.
*உதடு அல்லது முகம் நீல நிறமாக மாறும்போது .
*தன்னிலை இழத்தல் எனும் நிலை அதிகரிக்கும்போது.
*மார்பு பகுதியில் தொடர் வலி அல்லது அழுத்தம் ஏற்படும்போது.
*மந்தமான பேச்சு அல்லது வலிப்புதாக்கங்கள்.
*எழுந்திருக்கவோ அல்லது விழித்திருக்கவோ முடியவில்லை என்ற நிலை ஏற்படும்போது..

Next Post

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்..

Fri May 28 , 2021
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டது.முழு ஊரடங்கானது வரும் மே 31 ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில்,நோய்த் தொற்றானது மேலும் பரவாமல் தடுக்க மற்றும் பொது மக்களின் நலன் கருதி,மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
corona-extended-in-tamilnadu
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய