
உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றன .இந்நிலையில் ஜனவரி 13 முதல் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது .
தடுப்பூசியானது முதற்கட்டமாக முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் என மொத்தம் 30 கோடி பேர்களுக்கு தடுப்பூசியினை செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது .இதில் முன் களப் பணியாளர்க்ளுக்கு தடுப்பூசியானது இலவசமாக போடப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது .
இந்தியாவின் புனே நகரில் அமைந்துள்ள சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் இணைந்து “கோவிஷில்டு” என்ற தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்தது .இது தவிர ,ஹைதராபாதில் உள்ள பரத் பையோடெக் நிறுவனத்தின் “கோவாக்ஸின் “என்ற தடுப்பூசியும் என இரண்டு தடுப்பூசிகளையும் தேசிய மருந்துக்கு கட்டுப்பாடு நிறுவனம் அவசர நிலை பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது .
சமீபத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை முக்கிய நகரங்களில் நடைப்பெற்றது.நாட்டில் மொத்தம் 37 தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன .இந்நிலையில் அவசர நிலை பயன்பாட்டிற்காக கோவிஷில்டு தடுப்பூசியும் ,கோவாக்ஸின் தடுப்பூசியும் பொதுமக்களுக்கு செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது .