நாடு முழுவதும் 14,989 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று : மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் …

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 14,989 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி (கடந்த 24 மணி நேரத்தில்) ,புதிதாக 14,989 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது .இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 1,11,39,516 ஆக உள்ளது .

ஐசிஎம்ஆர் அறிக்கையின் படி ,இதுவரை கொரோனா நோய்த்தொற்றால் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 1,08,12,044 ஆகவும் ,கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையானது 1,57,346 ஆக உள்ளது .

நாடு முழுவதும் தற்போது கொரோனவுக்காக 1,70,126 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் .மேலும் நாடு முழுவதும் 21,84,03,277 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி 1,56,20,749 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Next Post

இந்திய வானிலை ஆய்வு மையத்தில் (India Meteorological Department) வேலைவாய்ப்பு..

Wed Mar 3 , 2021
இந்திய வானிலை ஆய்வு மையத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .இப்பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . 1.Scientist ‘E’ (Forecasting) காலியிடங்கள் :03மாத சம்பளம் : 1,23,100 – 2,15,900 2.Scientist ‘E’ (Instrumentation) காலியிடங்கள் :03மாத சம்பளம் :1,23,100 – 2,15,900 3.Scientist ‘E’ (Computer/IT) காலியிடங்கள் :02மாத சம்பளம் :1,23,100 – 2,15,900 4.Scientist ‘D’ (Forecasting) காலியிடங்கள் :14மாத […]
imd-jobs-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய