இந்தியாவில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா : ஒரே நாளில் புதிதாக 53,476 பேருக்கு தொற்று..

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 53,476 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.தற்போது உலகளவில் கொரோனா பாதிப்பானது 12.54 கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது .இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 26,490 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 53,476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,17,87,534 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியாவில் ஒரே நாளில் 251 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,12,31,650 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,60,692 ஆகும் .

இந்தியா முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 3,95,192 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 5,31,45,709 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

செவ்வாய் கிரகத்தில் பறக்கவிடப்படும் நாசாவின் ஹெலிகாப்டர்

Thu Mar 25 , 2021
நாசா விண்வெளி அமைப்பானது இன்ஜெனூட்டி என்ற ஹெலிகாப்டரை ஏப்ரல் 8 ஆம் தேதிக்குள் செவ்வாய்க்கிரகத்தில் பறக்கவிடப்படும் என தெரிவித்துள்ளது.இதன்மூலம் உலகத்துக்கு வெளியே முதல் முறையாக வேறு கிரகத்தில் ஹெலிகாப்டரை நாசா இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை கடந்த ஆண்டு மார்ச் மாதம் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது.இந்த ரோவர் விண்கலமானது செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் மற்றும் நீர் நிலைகள் ,தட்ப […]
nasa-ingunity-helicopter
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய