
இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.தற்போது,நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 53,480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 41,280 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 53,480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,21,49,335 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியாவில் ஒரே நாளில் 354 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சகத்தின் அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,14,34,301 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,62,468 ஆகும் .
நாடு முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 5,52,566 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 6,30,54,353 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.