இந்தியாவில் ஒரு நாளில் புதிய உச்சமாக 3,52,991 பேருக்கு கொரோனா பாதிப்பு..

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு இன்று மேலும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.ஒரே நாளில் புதிதாக 3,52,991 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து ஒருநாள் கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்தை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,52,991 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14.53 கோடியைத் தாண்டியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 3,52,991 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,73,13,163 ஆக அதிகரித்துள்ளது.நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது 28,13,658 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்

ICMR அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,43,04,382 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,95,123 ஆகும் .நாடு முழுவதும் இதுவரை 14,19,11,223 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

ஆஸ்கர் விருதுகள் - 2021

Mon Apr 26 , 2021
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 23 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக ஆஸ்கர் எனும் அகாடமி விருது வழங்கும் விழா 2 மாதங்கள் தாமதமாக நடத்தப்பட்டது. உலகமே எதிர்பார்த்து கொண்டிருந்த 93-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது. ஆஸ்கர் […]
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய