இந்தியாவில் தொடர்ந்து உச்சமடையும் கொரோனா பாதிப்பு : ஒரே நாளில் 4,14,188 பேருக்கு கொரோனா பாதிப்பு ..

covid-19-peak-in-india
covid-19-peak-in-india

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக கொரோனா தொற்று இரண்டாவது நாளாக 4 லட்சத்தை கடந்துள்ளது.கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக மாநிலங்கள் அனைத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் ,ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 4,14,188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2வது அலை பிற உலக நாடுகளை விட இந்தியாவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,14,91,598 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 3,915 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,76,12,351 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,34,083 ஆகும் .

இந்தியா முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 36,45,164 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 16,49,73,058 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

கொரோனாவை கண்டறியும் சிறந்த பரிசோதனைகள் எது ?

Fri May 7 , 2021
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றை உறுதி செய்வதற்கு தற்போது ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்தியாவில் ரேபிட் டெஸ்ட் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் அதில் பல குளறுபடிகள், தவறான முடிவுகள் பெறப்பட்டதால் அதை நிறுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் நெகட்டிவ் முடிவு வந்து, கொரோனா அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு சி.டி.ஸ்கேன் அவசியம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஆர்.டி.பி.சி.ஆர்(RT PCR) பரிசோதனை : இந்தியாவில் […]
covid-19-test-CT-Scan
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய