கொரோனா பாதிப்பு மற்றும் அறிகுறிகள் – தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாத்துக்கொள்வது எப்படி? மருத்துவரின் ஆலோசனை …

கொரோனா பாதிப்பானது தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.இந்தியா முழுவதும் ஒரு நாள் பாதிப்பு 3 லட்சத்தை கடந்து வருகிறது.இன்னும் இரண்டு வாரங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளவர்கள் மருத்துவமனைகளுக்கு செல்லாமல் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.தற்போது அனைத்து மாநிலங்களிலும் உள்ள உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் வேகமாக நிரம்பிவருகின்றன.

மருத்துவரின் ஆலோசனைகள் :

*வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்பவர்களுக்கு ஆரோக்கிய உணவு அவசியம். அவர்களது அறைகளை துாய்மைப்படுத்த கிருமி நாசினிகள் கட்டாயம் இருத்தல் அவசியம்.

*கொரோனா பாதித்தவர்களுக்கு தேவையான மருந்துகள் கைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி முகக் கவசம் ஆகியவை போதிய அளவில் வைத்திருக்க வேண்டும்.

*முககவசங்களை ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.

*பல்ஸ், ஆக்சி மீட்டர், தெர்மா மீட்டர் ஆகியவற்றை வைத்து அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

*நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் கையுறைகள் ,மற்றும் இரண்டு முக கவசங்கம் அணிவது அவசியம்.

*நோயாளியின் அறையில் இருக்கும்போது கதவு ஜன்னல்களை திறந்து வைத்தல் அவசியம்.

*லேசான அறிகுறிகள் உள்ளவர்கள் தங்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுதல் அவசியமாகும்.

Next Post

இந்தியாவில் ஒரு நாளில் 3,23,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ..

Tue Apr 27 , 2021
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை தற்போது கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.ஒரே நாளில் புதிதாக 3,23,144 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து ஒருநாள் கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்தை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,23,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14.53 கோடியைத் தாண்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, […]
corona-test-in-tamilnadu
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய