
கொரோன வைரஸ் : சீனா தயாரித்துள்ள கொரோன வைரஸ் தடுப்பூசிக்கு ஐக்கிய அரபு அமீரகம் அவசர ஒப்புதல் அளித்துள்ளது .
ஆறு வார கால பரிசோதனை செய்யப்பட்டு ,பின்னர் மனிதர்கள் உடலில் செலுத்தபட்ட பிறகு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சீனோஃபார்ம் எனும் மருந்து தயாரிப்பு நிறுவனம் சீன அரசுக்கு சொந்தமானது .இந்நிறுவனம் கண்டுபிடித்துள்ள தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை ஜூலை மாதம் தொடங்கியது. இந்த பரிசோதனை இன்னும் முற்றுப்பெறவில்லை.
இந்நிலையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ரஷ்யா உலகின் முதன் முதலில் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியது. இந்நாடு கொரோனா தடுப்பூசிக்கு ஆகஸ்ட் மாதம் அனுமதி வழங்கியது.