இந்தியாவில் ஒரு நாளில் 3,23,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ..

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை தற்போது கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.ஒரே நாளில் புதிதாக 3,23,144 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து ஒருநாள் கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்தை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,23,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14.53 கோடியைத் தாண்டியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 3,23,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,76,36,307 ஆக அதிகரித்துள்ளது.நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது 28,82,204 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

ICMR அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,45,56,209 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,97,894 ஆகும் .நாடு முழுவதும் இதுவரை 14,52,71,186 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

சி .ஏ தேர்வுகள் ஒத்திவைப்பு - இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு அறிவிப்பு ..

Tue Apr 27 , 2021
இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது.இதனால் பல்வேறு துறைகளில் நடைபெற இருந்த பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும்,ஒத்திவைக்கப்பட்டும் வருகின்றன. இதனைத் தொடர்ந்து மே மாதத்தில் நடைபெற இருந்த சி.ஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது.இதன் காரணமாக வரும் மே மாதம் 21ம் தேதி நடைபெற இருந்த இறுதித்தேர்வு மற்றும் […]
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய