இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம் : புதிதாக 11,466 பேருக்கு கொரோனா தொற்று..

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 11,466 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,43,88,579 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் 384 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 460 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,61,849 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,37,87,047 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 11,961 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,39,683 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.நாடு முழுவதும் நேற்று 52,69,137 டோஸ்களும், இதுவரை 109 கோடியே 63 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.

Next Post

NTSE - தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..

Wed Nov 10 , 2021
ஜனவரி 2022 தேசிய திறனாய்வுத் தேர்விற்கு பத்தாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 08.11.2021 முதல் 13.11.2021 வரை பதிவிறக்கம் செய்து , பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ .50 / – சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தேசிய திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யும் தேதி 20.11.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசுத் […]
NTSE-Exam-postponed-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய