இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம் : புதிதாக 16,326 பேருக்கு கொரோனா தொற்று..

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 16,326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,41,59,562 ஆக உயர்ந்துள்ளது.இதில் அதிகபட்சமாக கேரளாவில் 9,361, மகாராஷ்டிராவில் 1,632, தமிழ்நாட்டில் 1,152 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 666 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,53,708 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,35,32,126 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 17,677 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,73,728 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் நேற்று 68,48,417 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 101 கோடியே 30 லட்சமாக உயர்ந்துள்ளது.

Next Post

நவம்பர் முதல் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படாது - சென்னை பல்கலைக்கழகம்..

Sat Oct 23 , 2021
இளநிலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்புகளுக்கான அனைத்துப் பருவத் தேர்வுகளும் வரும் நவம்பர் மாதம் முதல் நேரடியாகவே நடத்தப்படும், ஆன்லைன் மூலம் நடத்தப்படாது என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கௌரி கூறுகையில், நவம்பர் மாதம் முதல், அனைத்து மாணவ, மாணவியர்களும் பருவத் தேர்வுகளை நேரில் வந்து வகுப்பறைகளில்தான் எழுத வேண்டும்,ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படாது என்று தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் இணைப்புப் பெற்ற அனைத்துக் […]
university-of-madras-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய