இந்தியாவில் புதிதாக 10,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ..

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 10,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,44,47,536 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 125 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,63,655 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் உயிரிழப்பு விகிதம் 1.35 % ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,38,49,785 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 11,926 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,34,096 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 1,12,34,30,478 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30,20,119 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

பொறியியல் படிப்புகளில் அகமதிப்பீடு மதிப்பெண் உயா்வு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ..

Mon Nov 15 , 2021
2021ஆம் ஆண்டிற்கான பொறியியல் படிப்புக்கான புதிய நடைமுறையினை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இதில் மாணவா்களுக்கான பாடத்திட்டம், தோ்வு, மதிப்பெண்கள் வழங்கும் முறை உள்ளிட்டவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தற்போது பொறியியல் படிப்புகளில் அக மதிப்பீட்டுக்கான மதிப்பெண் 20 சதவீதத்திலிருந்து 40 ஆக உயா்த்தி அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு வரை உள்ள பொறியியல் படிப்புகளில் 20 சதவீத மதிப்பெண் அக மதிப்பீட்டுக்கும், 80 சதவீத மதிப்பெண் எழுத்துத் தோ்விற்கும் வழங்கப்பட்டு வந்தது […]
anna-university-latest-news-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய