
தற்போது இந்தியாவில் கொரோனா அதிவேகமாக பரவுவதற்கு இந்த உருமாறிய கொரோனாதான் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு இடையே இந்தியாவில் உருமாறிய கொரோனா 17 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு நாடுகள் இந்திய விமானங்களுக்கு தடை விதித்து வருகின்றன.
இந்தியாவில் தற்போது தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் உருமாறிய கொரோனா வைரஸின் வகை என கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு பி-1-617 என்று பெயரிடப்பட்டுள்ளது.
உருமாறிய கொரோனா குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் ,
இந்தியாவில் தற்போது பரவி வரும் கொரோனாவின் பிற மாறுபாடுகளை காட்டிலும் பி-1-617 அதிக வளர்ச்சி விகிதத்தை கொண்டுள்ளது. இந்த வகை கொரோனா அதிவேகமாக பரவக் கூடிய தன்மை கொண்டது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பி-1-617 உருமாறிய கொரோனா வைரஸ் குறைந்தது 17 நாடுகளுக்கு தற்போது பரவி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் ,பெரும்பாலான வைரஸ் வகைகள் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து பதிவேற்றப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது வேகமாக பரவி வரும் வைரஸ் உருமாறிய கொரோனாவின் ஒரு பங்காக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.