
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 12,881 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் ,இதுவரை மொத்தம் 1,09,50,201 பேர் பாதிப்பட்டுள்ளதாகவும் ,1,06,56,845 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாகவும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 101 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ,நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,56,014 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் ,ஐசிஎம்ஆர்(ICMR) அமைப்பின் புள்ளிவிவரப்படி,நேற்று (புதன்கிழமை ) வரையிலும் சுமார் 20,87,03,791 பேருக்கு தொற்று கண்டறியும் சோதனை நடைபெற்றது எனவும் ,புதன்கிழமை மற்றும் சுமார் 7,26,562 பேருக்கு தொற்று கண்டறியும் சோதனை நடத்தப்பட்டதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .பின்னர் ,கொரோனா தடுப்பூசி மருந்தானது வியாழக்கிழமை காலை 8 மணி நேரப்படி ,சுமார் 91,86,757 பேருக்கு செலுத்தப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
தடுப்பூசி போடப்பட்டவர்களில் (பிப்.17 வரை ) 37 பேர் ஒவ்வாமை காரணமாக மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . இவர்களில் 23 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்ததாகவும் கூறப்படுகிறது .இதில் தடுப்பூசி செலுத்தியவர்களில் 12 பேர் உயிரிழந்ததாகவும் ,2 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .