பிற வைரஸ்களில் இருந்து பாதுகாப்பு தரும் கொரோனா தடுப்பூசி : ஆய்வில் தகவல்..

கொரோனா வைரசுக்கு எதிரான கோவிட்-19 தடுப்பூசிகள், அதே போன்ற பிற கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும் பாதுகாப்பு அளிக்கும் என அமெரிக்காவின் வடமேற்கு பல்கலைக்கழக பீன்பெர்க் மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த ஆய்வில் கொரோனா வைரஸ்கள் என்னும்போது, அது சார்பெகோ வைரஸ் அடங்கிய சார்ஸ் கோவ்-1, சார்ஸ், சார்ஸ் கோவ்-2 ஆகிய 3 வைரஸ்களை குறிக்கிறது எனவும் தெரிய வந்துள்ளது.

கோவிட்-19 தடுப்பூசி தற்போது கோவிட் -19 தொற்றை உருவாக்குகிற சார்ஸ்கோவ்-2 வைரசுடன் பிற வைரஸ்களையும் தடுக்கிறதாம். மேலும் சாதாரண ஜலதோஷத்தை ஏற்படுத்துகிற எச்கோவ்-ஆக்43 மற்றும் எச்கேயு-1 வைரஸ்களில் இருந்தும் கோவிட்-19 தடுப்பூசி பாதுகாப்பு அளிக்கிறதாம்.

மேலும் இந்த வைரஸ்களுக்கு எதிராக கோவிட்-19 தடுப்பூசி எவ்வளவு காலம் பாதுகாப்பு அளிக்கும் என்பதை தற்போது ஆராய்ந்து வருவதாக ஆராய்ச்சியாளர் பாப்லோ பெனாலோஸாமெக்மாஸ்டர் கூறி உள்ளார்.

Next Post

இந்தியாவில் புதிதாக 14,623 பேருக்கு கொரோனா தொற்று..

Wed Oct 20 , 2021
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில்14,623 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,41,08,996 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 197 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,52,651 ஆக உள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் […]
corona-status-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய