ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி..

corona-vaccine-in-tamilnadu

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கமானது படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது.இந்தியாவில் கொரோனா தொற்று கர்நாடகா, டெல்லி, சத்தீஸ்கர், குஜராத், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், அரியானா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் அதிவேகமாக பரவி வருகிறது.இதில் குறிப்பாக,மகாராஷ்டிரா மாநிலத்தில் பன்மடங்கு கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

கொரோனா தொற்று அதிகமாக பரவுவதற்கு முகக்கவசம் அணியாமல் செல்வது, சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பது அல்லது கைகழுவாமல் இருப்பது போன்றவையே காரணமாக அமைகிறது.கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பொதுமக்களாகிய நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து முறையாக கடைப்பிடித்தால் கொரோனவை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 1-ந் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட இருக்கிறது. தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்ய அவசியம் இல்லை. ஆதார் கார்டு அல்லது வேறு ஏதாவது அடையாள அட்டை வைத்திருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை மற்ற நோய்கள் உள்ள 45 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.ஏப்ரல் 1 முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

தமிழ்நாட்டில் தடுப்பூசி போடுவதற்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், மருத்துவக் கல்லூரி மருத்துவனைகள், தனியார் ஆஸ்பத்திரிகள் என பல்வேறு இடங்களில் தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, பொதுமக்கள் அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தடுப்பூசியை கண்டிப்பாக போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Post

2020-21 நிதியாண்டிற்கான வரி சேமிப்பு முதலீட்டை முடிக்க மார்ச் 31 கடைசி நாள்..

Fri Mar 26 , 2021
2020-21ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி, வரிச் சேமிப்பு, முதலீடு ஆகியவற்றிக்கான முக்கிய பணிகளை வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் முடித்துக்கொள்ள கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. வருமான வரிச் சேமிப்பு: வருமான வரிச் சேமிப்பு 80சி பிரிவின்படி ஆண்டிற்கு 1.5 லட்சம் ரூபாய் வருமான வரிச்சலுகை பெற முடியும்.இந்த தொகையை நீங்கள் சலுகையாக பெற மார்ச் 31 ஆம் தேதிக்குள் முதலீடு செய்யும் பட்சத்தில் வரி பணத்தை நீங்கள் சேமிக்கலாம். […]
Income-Tax-last-date-march-31
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய