நாடு முழுவதும் இணை நோய் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி..

இந்தியாவிலும் 12 வயதில் இருந்து 17 வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு தற்போது முடிவு செய்துள்ளது.உலகில் பல நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தற்போது 75 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக்-வி ஆகிய தடுப்பூசி மருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.அனால் இந்த தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு போடுவதற்கு ஏற்றதாக தயாரிக்கப்படவில்லை.

குழந்தைகளுக்கு பயன்படுத்த கூடிய ‘சைகோ வி-டி’ என்ற புதிய மருந்தை சைடுஸ் காடிலா என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த மருந்திற்க்கான சோதனை வெற்றி பெற்றுள்ளது .இதன் மூலம் இம்மருந்தை குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.மேலும் இம்மருந்தை இந்தியாவில் பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முதலாவதாக ‘சைகோ வி-டி’ என்ற புதிய மருந்தை இணை நோய் உள்ள குழந்தைகளுக்கே முதலில் போடப்பட இருக்கிறது. அதாவது இதய நோய், உடல் பருமன், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற நோய் உள்ள குழந்தைகளுக்கு முதலில் ஊசி போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நாடு முழுவதும் 20 முதல் 30 லட்சம் குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு 3 மாதத்தில் ஊசி போட்டு முடிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மற்ற குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Next Post

மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா நிலவரம்..

Tue Sep 14 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி 16,549 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,217 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 27 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 201 பேருக்கும்,சென்னையில் 212 […]
district-wise-corona-updates-14-9-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய