
சென்னையில் தொடங்கப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாமில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 முதல் 59 வயதுக்குட்பட்ட இணை நோய் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
சென்னையில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னியில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் 20 மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டு 2 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் இன்று தொடங்கியது.
சென்னையில் தொடங்கப்பட்ட முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறுகிறது.முகாமில் கலந்துகொள்ள வருபவர்கள் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டுவர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.இந்த முகாமில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 முதல் 59 வயதுக்குட்பட்ட இணை நோய் உள்ள பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் சென்னையில் வாரந்தோறும் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் சென்னையில் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் பேர் என 45 நாள்களில் 30 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.