இந்தியாவில் கொரோனா தொற்றால் இன்று மேலும் 15,510 பேர் பாதிப்பு : மத்திய சுகாதாரத் துறை ..

இந்தியாவில் கொரோன தொற்றால் இன்று மட்டும் 15,510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .இந்தியாவில் கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது .மேலும்,இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களில் கொரோனாவின் தொற்று அதிகரித்து வருகிறது .

இன்று காலை 8 மணி நிலவரப்படி (கடந்த 24 மணி நேரத்தில் ) இந்தியாவில் மட்டும் 15,510 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ,மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .

இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,10,96,731 அதிகரித்துள்ளது .கொரோனா தொற்றிற்காக இதுவரை 1,68,627 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,மேலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 1,07,86,457 ஆக உள்ளது .கொரோனா பாதிப்பால் இதுவரை பலியானோர்களின் எண்ணிக்கையானது 1,57,157ஆக உள்ளது .

ICMR அறிக்கையின் படி , இதுவரை 1,43,01,266 பேருக்கு நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் ,பிப்ரவரி 28 ஆம் தேதி வரை (நேற்று வரை) மொத்தம் 21,68,58,774 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் இந்திய மருத்துவக் ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது .

நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி தடுப்பூசி போடும் பணியானது தொடங்கியது ,இந்நிலையில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் ,இணை நோய்கள் கொண்ட 45 வயது மேற்பட்டவருக்கும் மார்ச் 1 முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதனையடுத்து ,இன்று (மார்ச் 1) முதல் தடுப்பூசியானது 60 வயது மேற்பட்ட முதியவர்களுக்கும் ,இணை நோய்கள் கொண்ட 45 வயதினருக்கும் கொரோனா தடுப்பூசியானது நாடு முழுவதும் இன்று போடப்பட்டு வருகிறது .

Next Post

GATE தேர்வு(2021) விடைத்தாள் வெளியீடு ..

Mon Mar 1 , 2021
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் தேசிய உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ(M.E).,எம்.டெக்(M.Tech)., மற்றும் எம்.ஆர்க்(M.Arch).,உள்ளிட்ட முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேர கேட்(GATE) என்ற நுழைவுத் தேர்வானது நடத்தப்படுகிறது. 2020 -2021 ஆம் கல்வி ஆண்டிற்கான கேட் நுழைவுத் தேர்வானது கடந்த பிப்ரவரி மாதம் 5, 6, 7, 12, 13, 14 ஆகிய தேதிகளில் 27 பாடப் பிரிவுகளில் மொத்தம் 100 மதிப்பெண்களுக்கான தேர்வு கணினி மூலம் நடைபெற்றது […]
GATE-2021-Answer-key
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய