இந்தியாவில் புதிய உச்சத்தை தொடும் கொரோனா : ஒரே நாளில் 1,31,968 பேருக்கு கொரோனா பாதிப்பு..

இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,31,968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 1,31,968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,30,60,542 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 780 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,19,13,292 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,67,642 ஆகும் .

நாடு முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 9,79,608 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 9,43,34,262 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு..

Fri Apr 9 , 2021
நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர பொது நுழைவுத்தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட்டு,ஜூன் மாத இறுதியில் நுழுவுத் தேர்வு நடைபெறும் என உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 41 மத்திய பல்கலைக்கழகங்களில் புதிய கல்விக்கொள்கையின் படி மாணவர் சேர்க்கைகைக்கு பொது நுழைவுத் தேர்வு […]
central-university-common-entrance-exam
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய