இந்தியாவில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா : புதிதாக 1,68,912 பேருக்கு தொற்று..

இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவின் முதல் அலையை விட,இரண்டாவது அலை அதி வேகமாக பரவுவதோடு, கட்டுப்படுத்துவதற்கும் பெரும் சவாலாக உள்ளது.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,68,912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 1,68,912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,35,27,717 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 904 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,21,56,529 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,70,179 ஆகும் .

இந்தியா முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 12,01,009 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 10,45,28,565 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

பிளஸ்-2 வகுப்பறைகளில் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் : பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

Mon Apr 12 , 2021
பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வானது மே 3 ஆம் தேதி தொடங்கி 21-ந் தேதி முடிவடைகிறது.இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் பள்ளி கல்வித் துறையின் ஒப்புதலோடு நடத்தப்பட்டு வருகின்றன.தற்போது கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தனியார் பள்ளிகளின் வகுப்பறைகளில் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் அமர வைக்கப்படுவதாக ஒரு சில தகவல்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு வந்தவண்ணம் உள்ளன. இதனை கருத்தில்கொண்டு ஒரு சில வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, […]
plus-2-exam-
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய