கொரோனா 3வது அலை : 6 முதல் 8 வாரத்தில் தாக்கும் – எய்ம்ஸ் தலைவர் எச்சரிக்கை..

கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவிற்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 2.98 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3.85 லட்சத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலை குறித்து மருத்துவ நிபுணர்களும், விஞ்ஞானிகளும் பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர்.

சமூக இடைவெளியை முறையாக மக்கள் கடைபிடிப்பதில்லை மற்றும் முக கவசம் முறையாக அணிவதில்லை. இதன் காரணமாகவே மூன்றாவது அலையை இந்தியா எதிர்க்கொள்ளும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலை 6 முதல் 8 வாரத்தில் தாக்கும் என்று எய்ம்ஸ் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்து உள்ளார்.மேலும் இதன் பாதிப்பு இப்போதிருந்தே ஆரம்பித்திருக்கும் என்று கருதுவதாக கூறியுள்ளார்.அடுத்த 6 முதல் 8 வாரங்களுக்குள் கொரோனாவின் 3-வது அலை ஏற்படும். இது சில காலத்துக்கு இருக்கலாம் என்று கூறியுள்ளார். கூட்டத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தையும் பின்பற்றுவதை பொறுத்து எல்லாம் இருக்கிறது.

கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் எல்லாவிதமான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் தீவிரப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

புதிய வகை உருமாற்ற கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு..

Sat Jun 19 , 2021
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளுக்கும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும்பாலான நாடுகளில் படிப்பு படியாக குறையத் தொடங்கியபோது அந்த வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது. இந்தியாவிலும் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ்க்கு ‘டெல்டா’ என்று அழைக்கப்படுகிறது.இந்த கொரோனா வைரஸ் ஆனது இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் வெவ்வேறு வகையில் உருமாற்றம் அடைந்து […]
Lambhda-mutated-corona-vairus
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய