
தீவிரமான மற்றும் லேசான கொரோனா அறிகுறிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மெர்க் நிறுவனம் தயாரித்த மோல்னுபிரவீர் மாத்திரைகள் வழங்க விரைவில் அவசர கால அனுமதி வழங்கப்படும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரமான கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களுக்கும் மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கும் இந்த மாத்திரை பரிந்துரைக்கப்படவுள்ளது. ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள பாக்ஸ்லோவிட் மாத்திரைகளுக்கு அனுமதி வழங்க சில காலம் ஆகலாம்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெருந்தொற்றிலிருந்து எண்டமிக் நோயாக கொரோனா மாறும் இச்சூழலில் இந்த இரண்டு மாத்திரைகள் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது. தடுப்பூசிகளை விட அது முக்கிய பங்கு வகிக்கும். இந்த மாத்திரைகளின் மூலம் கொரோனாவை அறிவியல் முடிவுக்கு கொண்டு வரவுள்ளது. மேலும் மோல்னுபிரவீர் மாத்திரைக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக விஞ்ஞான மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கோவிட் வியூகக் குழு தலைவர் ராம் விஸ்வகர்மா தெரிவித்துள்ளார்.