இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம் : ஒரே நாளில் 3,86,452 பேருக்கு தொற்று உறுதி ..

இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.நாடு முழுவதும் தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.தினந்தோறும் கொரோனா தொற்றால் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,86,452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 15.11 கோடியைத் தாண்டியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 3,86,452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,87,62,976 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 3645 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்தின் அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,53,84,418 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,08,330 ஆகும் .

இந்தியா முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 31,70,228 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 15,22,45,179 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

ட்விட்டர் மூலம் ஆக்சிஜன்,படுக்கை வசதி : தமிழக அரசு தகவல் ..

Fri Apr 30 , 2021
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. கொரோனா நோய்த் தொற்று தற்போது தமிழகத்திலும் தனது வீரியத்தை காட்ட தொடங்கியுள்ளது.இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் வசதிகள் எளிதில் கிடைக்க தமிழக அரசு ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை தொடங்கவுள்ளது. தமிழக அரசு கொரோனா […]
oxygen-cylinder-and-bed-for-corona-patient
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய