
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து படிப் படியாக குறைந்து கொண்டே வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக பல மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்றே குறைந்திருந்தாலும், உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது மிகவும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.கொரோனா பாதித்தவர்களுக்கு தற்போது கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவது மேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 2,57,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கினாலும்,தினசரி பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,62,89,290 ஆக உள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 4,194 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,30,70,365 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,95,525 ஆகும் .நேற்று ஒரே நாளில் கொரோனா பிடியிலிருந்து 3,57,630 பேர் குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 29,23,400 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 19,33,72,819 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.