இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,126 பேருக்கு கொரோனா தொற்று ..

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 10,126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இது கடந்த 266 நாட்களில் இல்லாத அளவில் தினசரி பாதிப்பில் குறைவு ஆகும்.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,43,77,113 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் 262 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 332 பேர் இறந்துள்ளளர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,61,389 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,37,75,086 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 11,982 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,40,638 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.நாடு முழுவதும் நேற்று 59,08,440 டோஸ்களும், இதுவரை 109 கோடியே 8 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.

Next Post

தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு..

Tue Nov 9 , 2021
தமிழகத்தில் நவம்பர் 10, 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தனித்தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நவம்பர் 8 முதல் 12 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், கனமழை எச்சரிக்கை காரணமாக நவம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் முறையே நடைபெறஇருந்த தமிழ், ஆங்கிலம் தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் தொடர்ச்சியாக […]
8th-students-exam-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய