இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 38,949 பேருக்கு தொற்று..

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. கொரோனா பரவல் ஆனது நேற்றைய பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று குறைந்துள்ளது.கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்பப்படுகின்றன.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 38,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 3,10,26,829 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியாவில் ஒரே நாளில் 542 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,01,83,876 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,12,531 ஆகும்.நேற்று ஒரே நாளில் 40,026 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,30,422 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.நாடு முழுவதும் இதுவரை 39,53,43,767 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

தமிழகத்தில் புதிதாக நான்கு நீட் தேர்வு மையங்கள் அறிவிப்பு..

Fri Jul 16 , 2021
நாடு முழுவதும் நடப்பாண்டிற்க்கான நீட் தேர்வு இளநிலை மாணவர்களுக்கு செப்டம்பர் 12ல் நடைபெறும் எனவும்,மேலும் முதுகலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடத்தப்படும் எனவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் சிக்கல்களையும் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே .ராஜன் தலைமையிலான குழு அளித்த ஆய்வின் நகலை தமிழக சுகாதார அமைச்சர் […]
NEET-exam-Centre-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய