மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : நாடு முழுவதும் புதிதாக 18,327 பேருக்கு நோய்த்தொற்று..

இந்தியாவில் கொரோனாவின் தாக்கமானது மீண்டும் அதிகரித்து வருகிறது .நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 18,327 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி (கடந்த 24 மணி நேரத்தில்) ,புதிதாக 18,327 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது .இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,11,92,088 ஆக அதிகரித்துள்ளது உள்ளது .இந்தியாவில் கொரோனா மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது .

ICMR (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின்) புள்ளிவிவரப்படி ,இதுவரை கொரோனா நோய்த்தொற்றால் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,08,54,128 ஆக உள்ளது.கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 1,57,656 ஆக உள்ளது

இந்தியா முழுவதும் தற்போது கொரோனவுக்காக 1,80,304 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் .மேலும் இந்தியா முழுவதும் 22,06,92,677 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நிலவரப்படி இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி 1,94,97,704 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Next Post

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போடப்படும் தனியார் மருத்துவமனைகளின் பட்டியல் ..

Sat Mar 6 , 2021
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு இணையாக நாடு முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன .இதுவரை இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி 1,94,97,704 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது . தற்போது தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் தனியார் மருத்துவமனையின் பட்டியலை பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறை வெளியிட்டுள்ளது .இதன்படி ,தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் தனியார் மருத்துவமனையில் […]
corona-vaccination-in-tamilnadu
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய