ஒரு கொரோனா நோயாளி மூலம் 406 பேருக்கு பரவும் கொரோனா – மத்திய அரசு எச்சரிக்கை

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் சமூக இடைவெளி மற்றும் தனிமைப்படுத்துதல் ஆகியவற்றை முறையாக கடைப்பிடிக்காமல் இருந்தால், அவரால் 30 நாட்களில் 406 பேருக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் முகக்கவசம் அணியாமலும் ,கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத ஒருவர் முகக்கவசம் அணிந்தும் ஒருவரை ஒருவர் பேசிக்கொள்பவரானால் கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத அந்த நபருக்கு 30 சதவீதம் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரும் ,தொற்றால் பாதிக்கப்படாத நபரும் முகக்கவசம் அணிந்திருந்து பேசிக்கொண்டிருந்தால்,பாதிக்கப்படாத நபருக்கு 1.5 சதவீதம் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனவால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் முழுமையாக சமூக இடைவெளியை பின்பற்றினால் அவரால் எந்த ஒரு நபருக்கும் தொற்று ஏற்படாது.இதற்கு மாறாக, தொற்று பாதித்த நபர் 50 சதவீதம் சமூக இடைவெளியை பின்பற்றினால் அவரால் 406 நபர்களுக்கு பதிலாக 15 பேர் மட்டுமே பாதிக்கப்படுவார்கள் என்றும் ,தொற்று பாதித்த நபர் 75 சதவீதம் சமூக இடைவெளியை பின்பற்றினால் அவர் மூலம் வெறும் 2 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஒரு ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.

எனவே ,பொது மக்களாகிய நாம் அனைவரும் முறையாக சமூக இடைவெளியை கடைப்பிடித்து,அரசு கூறும் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடித்தால் கொரோனவை முற்றிலுமாக ஒழித்திடலாம் .

Next Post

மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் ..

Fri May 21 , 2021
தமிழகக்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.இன்றைய நிலவரப்படி ,கடந்த 24 மணி நேரத்தில் 36,184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகக்தில் இன்று 1,74,112 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது .இவற்றில் இன்று புதிதாக 36,184 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.இதில் அதிகபட்சமாக சென்னையில் 5,913 போ் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் இதைத்தொடர்ந்து கோவையில் 3,243 பேருக்கும், செங்கல்பட்டில் 2,226 பேருக்கும் நோய்த் […]
district-wise-corona-status-in-tamilnadu-20-5-21
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய