
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த வகையில் மும்பை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆராய்ச்சி நடத்தி உள்ளனர். இதில் வீட்டை விட்டு வெளியில் வந்து ஒருவர் , இருமுகிற போது அதே திசையில் மெல்லிய தென்றல் காற்று சில்லென்று வீசினால் அது கொரோனா தொற்றை விரைவாக பரப்பும் என கண்டறிந்துள்ளனர்.
இதுபற்றி ஆராய்ச்சியாளர் அமித் அகர்வால் கூறும்போது, “எங்கள் ஆய்வு முடிவுகள் அடிப்படையில், வீட்டுக்கு வெளியே வந்து விட்டாலே முக கவசங்கள் அணிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக சில்லென்று காற்று வீசுகிற சூழலில் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்” என தெரிவித்தார். மேலும் முழங்கையில் இருமுவதும் அல்லது முகத்தை திருப்பிக்கொண்டு இருமுவதும் வெளியே கொரோனா பரவுகிற வாய்ப்பைக் குறைக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.