இந்தியாவில் அதிவேகத்தில் பரவும் கொரோனா : ஒரே நாளில் 81 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு..

இந்தியா முழுவதும் மின்னல் வேகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 81,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது உலகளவில் கொரோனா பாதிப்பானது 13 .01 கோடியைத் தாண்டியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 81,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,23,03,131 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியாவில் ஒரே நாளில் 469 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,15,25,039 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,63,396 ஆகும் .

நாடு முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 6,14,696 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 6,87,89,138 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

UPI பயன்பாட்டின் மூலம் ATM-ல் இருந்து பணத்தை எடுப்பது எப்படி ?

Fri Apr 2 , 2021
UPI செயல்முறை : UPI என்பது ஒரு ஒரு நிகழ்நேர கட்டண முறையாகும்,(UPI – Unified Payments Interface).பணப் பரிவர்த்தனைக்கு உங்கள் வங்கிக் கணக்கை UPI பயன்பாட்டுடன் இணைக்க வேண்டும்.இதன் மூலம் ,UPI மொபைல் பயன்பாட்டை பயன்படுத்தி ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு உடனடியாக பணத்தை எளிதில் மாற்றலாம்.மேலும்,ஒரு UPI பயன்பாட்டின் மூலம் பல வங்கி கணக்குகளை இயக்கலாம். பொதுவாக நாம் ATM -ல் இருந்து பணத்தை […]
cash-Withrdrawal-by-using-UPI
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய