
இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை மிகுந்த வீரியத்துடன் பரவி வருகிறது.இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தொற்று அதிவேகமாக பரவி வருவதன் காரணமாக,ஒரு சில மாநிலங்களில் இரவு நேர பொது முடக்கமும்,முழு ஊரடங்கும் அமல் படுத்தப்பட்டு வருகிறது.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,17,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 2,17,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,42,91,917 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 1,185 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICMR அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,25,47,866 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,74,308 ஆகும் .கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,18,302 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 15,69,743 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 11,72,23,509 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.